137
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடத்தப்பட உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. கட்சியின் உயர் மட்டத்தினர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேற்றைய தினம் தீர்மானித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love