Home இலக்கியம்பயங்கரவாதியின் மகள் -தீபச்செல்வன்

பயங்கரவாதியின் மகள் -தீபச்செல்வன்

by admin

 பயங்கரவாதியின் மகள்

இறந்தேனும் தன் துணைவனைக்
கண்டுகொண்டாள் அவள்
இப்படி ஒரு நீள் பிரிவு
எந்தப் பெண்ணுக்கும்
கிடைத்துவிடக்கூடாது என எண்ணியபடி
ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி
எந்தக் குழந்தையும்
இப்படி ஒரு சிறை வண்டியில்
ஏறிவிடக்கூடதென எண்ணியபடி
தாயின் சடலத்தின் பின்
கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன்
எந்தக் குழந்தையும்
இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு
கொள்ளி சுமக்கக்கூடாதென எண்ணியபடி
காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு
விலங்கிடப்பட்ட கைகளால்
அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன்
எந்த ஒரு துணைவனுக்கும்
இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு
நிகழ்ந்துவிடக்கூடாதென எண்ணியபடி
இரத்தச்சுவடுகளின்றி
துப்பாக்கிச் சத்தளின்றி தகர்ந்துபோனதொரு வீடு
குறுக்கும் மறுக்குமாக
பின்னப்பட்ட கம்பிகளினுள் சிறையிருக்கும்
பயங்கரவாதியின் மகள்
எண்ணிக் கொண்டாள்
எந்தவொரு சிங்களக் குழந்தைக்கும்கூ
இந்த நிலை நேர்ந்துவிடக்கூடாதென.

தீபச்செல்வன்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More