Home இந்தியா ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் :

ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் :

by admin

ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட 40 பேரில், ஹர்ஜீத் என்பவர் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், தப்பித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் மரபணுவை, அவர்களின் உறவினர்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து இதை உறுதி செய்ததாக தெரிவித்த அவர் உயிரிழந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் நான்கு பேர் இமாச்சல பிரதேசத்தையும், மற்றவர்கள் ,மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்

இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும அனைத்தும் ஒரே குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனையை தவிர பெரிய ஆதாரங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More