Home இலங்கைஇலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை   செயிட் அல் ஹுசைன் ஐ.நாவில் வெளி­யிடுகிறார்..

இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை   செயிட் அல் ஹுசைன் ஐ.நாவில் வெளி­யிடுகிறார்..

by admin

ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை  இலங்கை அர­சாங்கம்  எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது குறித்த விவாதம்  மனித உரிமை பேர­வையில் இன்று  புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.  அதன்­போது, இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வெளி­யிட இருக்­கிறார். இந்த அறிக்கை   ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அதன் பரிந்­து­ரை­களை கொண்ட சாரம்­சமே இன்று புதன்­கி­ழமை  வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்த அறிக்­கையை வெளி­யிட்ட பின்னர் இலங்கை தொடர்­பாக   மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன்   சிறப்­பு­ரை­ ஆற்றவுள்ளார்.

 ஏற்­க­னவே இலங்கை பற்றி வெளி­யிட்­டி­ருந்த  குறித்த அறிக்­கையில்,   இலங்கையில்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை  பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்பில்  சர்­வ­தேச சமூகம்   மாற்று வழி­களை   ஆரா­ய­வேண்­டு­மென செயிட்  அல் ஹுசைன்   கேட்­டி­ருந்தார். அதன்­படி  இன்று (21.03.18) நடை­பெ­ற­வுள்ள விவா­தத்தில் இலங்கை தொடர்பில் உரை­யாற்­ற­வுள்ள செயிட் அல் ஹுசைன் இலங்கை விவ­காரம் குறித்து மாற்று வழியை ஆரா­யு­மாறு   மீண்டும்    சர்­வ­தேச நாடு­க­ளிடம் கோரிக்­கை­  விடுப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை விவா­தத்தில்  இலங்­கையின் சார்பில்   வெளி­வி­வ­கார அமைச்சர்  திலக் மாரப்­பன  உரை­யாற்­ற­வி­ருக்­கின்றார். இதன்­போது ஜெனிவா பிரே­ர­ணையை   அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம்  எவ்­வா­றான  வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பதை திலக் மாரப்­பன தனது உரையில் வெளி­யி­டுவார். அதே­போன்று  தாம்  அர­சியல் ரீதியில்   எதிர்­கொண்­டுள்ள சவால்கள் குறித்து இந்த உரையில்  விளக்­க­ம­ளிப்பார் என   தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இன்றைய விவாதத்தின் போது, சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­களும்   உரை­யாற்­ற­வி­ருக்­கின்­றனர். திலக் மாரப்­ப­ன­வுடன் அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, மற்றும் பைஸர் முஸ்­தாபா ஆகியோர்,   இலங்கையின்  சார்பில் இன்­றைய விவாதத்தில்  பங்­கேற்­கின்­றனர்.

மேலும் சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­தி­களும்   இலங்கை குறித்த இந்த விவா­தத்தில் உரை­யாற்ற உள்ளனர்.  2015ஆம் ஆண்டு இலங்­கை­தொ­டர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட   பிரே­ர­ணைக்கு   இலங்கை அர­சாங்கம்  இனை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.  எனினும்  கடந்த 2017ஆம் ஆண்டு வரை குறித்த பிரே­ர­ணையை  முழு­மை­யாக இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­தாதன் கார­ண­மாக 2017 ஆம் ஆண்டு மீண்டும்  இரண்டு கால  அவகாசத்திற்கு  இந்த பிரே­ரணை உள்­ளாக்­கப்­பட்­டது.   அந்­த­வ­கையில்  2019ஆம் ஆண்­டுக்குள்  இந்தப் பிரே­ரணை   அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். எனினும் தற்போது   கால அவகாசத்தில் ஒருவருடம் முடிந்துள்ள நிலையில்  முன்னேற்றம் எதுவும் ஏற்படுத்தப்படாத சூழலே காணப்படுகின்றது.  இந்தப் பின்னணியிலேயே   இன்றைய தினம்   இலங்கை குறித்த விவாதம் ஐக்கியநாடுகள்  மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More