184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேற்கு அவுஸ்திரேலிய கரையோரங்களில் திமிங்கிலங்கள் குவியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுpக்னறது. சுமார் 150 திமிங்கிலங்கள் கரையோரப்பகுதியில் தத்தளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் பேர்த்தின் தென்பகுதியிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் மீனவர் ஒருவர் இந்த திமிங்கிலங்களை கண்டுள்ளார்.
இவ்வாறு கரையொதுங்கிய திமிங்கிலங்களில் அரைவாசியானவை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரையில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love