Home இலங்கைசாவகச்சேரியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு….

சாவகச்சேரியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு….

by admin

சாவகச்சேரி பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி புளியடி சந்தியில்இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த விபத்தில், வெள்ளாம் போக்காட்டி கொடிகாமத்தை சேர்ந்த 27 வயதுடைய  சிவயோகலிங்கம் மயூரன் என்பவரே உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி புளியடி சந்தியில் கடமையில் இருந்த சாவகச்சேரி போக்குவரத்து காவற்துறையினர் வீதியால் சென்ற  கார் ஒன்றினை மறித்த போது காரின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் காரினை முந்தி செல்ல முற்பட்டது. இதன் பின்னால் சென்ற இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலையே உயிரிழந்து உள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் பிரதான வீதியில் சந்தியில் நின்று வாகனங்களை பொலிசார் மறித்து சோதனை செய்ததால் தான் விபத்து ஏற்பட்டது என காவற்துறையினருடன் முரண்பட்டனர். அதனை அடுத்து காவற்துறையினர்  விபத்துக்கு உள்ளன இரு வாகனங்களையும் காவல்  நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More