Home உலகம்லண்டனில் சிறுவர் படையமைக்க முயற்சி செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை…

லண்டனில் சிறுவர் படையமைக்க முயற்சி செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை…

by admin

லண்டனில் சிறுவர்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த படையை அமைக்க முயற்சி செய்த இங்கிலாந்து வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 வயதான உமர் அகமது ஹக் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் முறையாகப் பயிற்சி பெறாமல் மதம் சர்ந்த பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றிய போது ; சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோப்படங்களை காண்பித்து அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

அது மட்டுமின்றி, லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர்களைக் கொண்டு ஒரு படையை அமைக்கவும் அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். உமர் அகமது ஹக்குடன் அவரது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.  விசாரணையின்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டஇதையடுத்து உமர் அகமது ஹக்குக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அவருடைய நண்பர்களில் ஒருவருக்கு 13 ஆண்டுகளும், மற்றையவருக்கு 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More