Home இலங்கையாழில் காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை

யாழில் காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மணியந்தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த காவல்துறையினரின் தற்காலிக சோதனை சாவடி இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மணியந்தோட்ட பகுதி ஊடாக பெருமளவான மணல் கடத்தல்கள் போதைப்பொருள் கடத்தல்கள் என்பன இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பகுதியில் யாழ்ப்பாண காவல்துறையினரினால் தற்காலிக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

குறித்த சோதனை சாவடியில் நிரந்தரமாக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவதில்லை. அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காவல்துறையினர் கடமையில் இல்லாத நேரம் சோதனை சாவடியை இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More