Home இந்தியா விஜய் சேதுபதியின் படத்தில் ரொக்ஸ்டார் ரமணியம்மா!

விஜய் சேதுபதியின் படத்தில் ரொக்ஸ்டார் ரமணியம்மா!

by admin

ரொக்ஸ்டார்  ரமணியம்மா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ரொக்ஸ்டார்  ரமணியம்மாவின் பாடல்களுக்கென தனியான ரசிகர்கர்கள் இருக்கிறார்கள். இவர் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சினிமாவில் ‘தெனாவட்டு’, ‘காதல்’ உட்பட பல படங்களில் ரமணியம்மா பாடியுள்ளாரார். விஜய் அன்றனி படத்திலும் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ரொக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்கள் தற்போது மிகப் பிரபலமாக ஒலித்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் தங்கள் இசையில் பாடவைப்பதாகக் உத்தரவாதங்கள் வழங்கிவருகின்றனர். இவரை கட்டாயமாக தன் இசையில் பாட வைக்கப் போவதாக யுவன் ஷங்கர் ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அண்மையில் இந்த நிகழ்ச்சியில் டி.இமான் கலந்துகொண்டபோது, தாய் பாசம் மிகுந்த ஒரு பாடலை அவர் முன்பு பாட, இமான் கண் கலங்கினார். தற்போது, விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் நடிக்கும் ‘ஜுங்கா’ படத்திலும் ஒரு பாடலை ரமணி அம்மாள் பாடியுள்ளார். சித்தார்த் விபின் இசையில் ரொக்ஸ்டார் ரமணியம்மாள் பாடியிருக்கும் பாடல் வெளிவந்தபின் மேலும்  பிரபலமாவார் எனக் கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More