குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான யோசனைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை, யோசனை விவாதத்திற்கு எடுக்கப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னர் நாட்டு தெரியப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எனவும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கருத்துக்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு மற்றும் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி எவருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்கவோ, அதனை வெற்றி பெற செய்யவோ முடியாது எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.