155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென கொஸ்டாரிக்காவின் புதிய ஜனாதிபதி கார்லோஸ் அல்வார்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 38 வயதான கார்லோஸ் வெற்றியீட்டியுள்ளார். மத்திய இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கார்லோஸ் அல்வராடோவை எதிர்த்து போட்டியிட்ட பெப்ரிக்கோ அல்வராடோவை விடவும் 21 வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.
தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை உருவாக்க விரும்புவதாக கார்லோஸ் அல்வராடோ தெரிவித்துள்ளார்.அனைவரும் ஐக்கியத்துடன் நாட்டை முன்நோக்கி நகர்த்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love