Home இலங்கைபிரதமர் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி ஏகமனதாக தீர்மானம்

பிரதமர் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி ஏகமனதாக தீர்மானம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட முன்னதாக பிரதமர் பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

ஏதேனும் ஓர் காரணத்திற்காக பிரதமர் தனது பதவிவிலகத் தவறினால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானம் குறித்து பிரதமருக்கு அறிவிப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்தப் கூட்டத்தில் சுமார் 42 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More