Home இந்தியாகாவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….

காவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….

by admin

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.  சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு வரும் 9-ம் திகதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More