இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மஸ்கெலியா, கவரவில தேயிலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி – பீதியில் தொழிலாளர்கள்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மஸ்கெலியா, கவரவில தேயிலை தோட்டத்தில் பெரிய சோலன்கந்த பிரிவில் தேயிலை செடிகளுக்கு மத்தியில் காணப்படும் குழி ஒன்றில் இருந்து நேற்று சிறுத்தை குட்டி ஒன்றை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

சிறுத்தை குட்டி மீட்கப்பட்ட போது அதன் கண்கள் கூட திறக்கப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது. பெண் தொழிலாளிகள் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த போதே இந்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் மேலும் சிறுத்தை குட்டிகள் இருக்கலாம் எனவும் தாய் சிறுத்தை தோட்டத்தில் உலாவி வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியை நல்லத்தண்ணி பிரதேசத்தில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap