Home இலங்கைஇறுதிக்கட்ட போரில் படை நகர்வுகளை முன்னெடுத்த இராணுவ அதிகாரிகள் கைதாவார்களா?

இறுதிக்கட்ட போரில் படை நகர்வுகளை முன்னெடுத்த இராணுவ அதிகாரிகள் கைதாவார்களா?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட இறுதிக்கட்ட போரில் படை நகர்வுகளை முன்னெடுத்த இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளில் கைதுசெய்யும் இரகசிய திட்டம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் கீழ் இந்த இராணுவ அதிகாரிகளை கைதுசெய்வதே மனித உரிமை பேரவையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. குறித்த அதிகாரிகளின் பெயர்கள் ஐ,நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை செயற்படுத்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள், மனித உரிமை பேரவைக்கு உதவியுள்ளன. இவர்கள் இலங்கை இராணுவ அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More