குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
போரில் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்திய, ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகாவை, இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம், ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 25 பேர் போர் குற்றங்களை செய்துள்ளதாக உள்ளதாக கூறி, யஷ்மின் சூகா இலங்கைக்கு எதிராக 75 அறிக்கைகளை ஐ.நா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்துள்ளதாக சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
புலம்பெயர் புலிகளுடன் இணைந்து இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டது என குற்றம் சுமத்தும் பிரதான முறைப்பாட்டாளரான யஷ்மின் சூகா, புலிகளின் ஆதரவாளர்களின் நிதியில் செயற்படுவதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.