Home இலங்கைஅன்ஜலோ மத்யூஸ் இனி பந்து வீச மாட்டார்

அன்ஜலோ மத்யூஸ் இனி பந்து வீச மாட்டார்

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

இலங்கை அணியின் முன்னாள் தலைவா அன்ஜலோ மத்யூஸ் இனி பந்து வீச மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவாக மத்யூஸ் திகழ்கின்றார். எவ்வாறெனினும் அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு உபாதை காரணமாக மத்யூஸ் பந்து வீசுவதனை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார். இதன்படி, இனி வரும் காலங்களில் அன்ஜலோ மத்யூஸ் ஓர் துடுப்பாட்ட வீரராக மட்டும் இலங்கை அணிக்காக சேவை வழங்க உள்ளார்.
அணியின் வீரர்களை நிர்வாகம் செய்யும் நோக்கில் தெரிவுக்குழுவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதாவது இனி வரும் காலங்களில் மத்யூஸ் மித வேகப்பந்து வீச்சில் ஈடுபடப் போவதில்லை என தேர்வுக்குழு தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More