காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளது
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள செயல் திட்டம்
; என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், காவிரி தொடர்பாக கர்நாடகம் மற்றும் புதுச்சேரியின் மனுவும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளனர்
மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு, தங்களது இறுதி தீர்ப்புடன் இணைந்துவிட்டது என்று கூறிய நீதிமன்றம், மே 3 ஆம் திகதி மத்திய அரசு வரைவு செயல்திட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை மே3 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது
அதேவேளை மாதந்தோறும் காவிரியில் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும் எனவும்ம் கர்நாடகாவுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது…
Apr 9, 2018 @ 04:45
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 16-ம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.
அதில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற செயல்திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தர விட்டது. எனினும் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிந்து பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இந்தநிலையில் செயல் திட்டம் என்பதற்கு விளக்கம் என்ன என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசின் நீர்வளத் துறை விளக்கம் கோரியதுடன் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பை மத்திய அரசு உரியமுறையில் அமுல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதுபோலவே, செயல் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசரணைக்கு எடுத்துக் கொள்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது