இலங்கை பிரதான செய்திகள்

வன்னி பெருநிலப்பரப்பை வரட்சி வாட்டுகிறது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்­டில் தற்போது ஏற்­பட்­டுள்ள கடும் வறட்­சி­யால் மன்னார் மாவட்டம் உட்பட வன்னி மாவட்டம் பெரும் பாதிப்படைந்­துள்­ளது. எனவும் , அங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு­ இலட்­சத்­தைத் தாண்­டி­யுள்­ளது எனவும் இடர் முகா­மைத்­துவ மத்­தி­ய­ நி­லை­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இலங்­கை­யில் இது­வரை 10 மாவட்­டங்­கள் கடும் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என இனங் காணப்­பட்­டுள்­ளன. அதில் 3ஆவது இடத்­தில் வன்­னிப் பெரு­நி­லப்­ப­ரப்­பின் மன்­னார் மாவட்­டம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இடர் முகா­மைத்­துவ மத்தி­ய­நி­லை­யம் வெளிட்ட அறிக்­கை­யின் பிர­கா­ரம் மன்­னா­ரில் 29 ஆயி­ரத்து 138 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 99 ஆயி­ரத்து 900பேர் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதுபோன்று முல்­லைத் தீவு மாவட்­டத்­தில் 3ஆயி­ரத்து 179 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 10ஆயி­ரத்து 5 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு குறிப்­பாக மேட்டு நிலங்­க­ளா­கக் காணப்­ப­டும் மல்­லி­கைத்­தீவு, வேணா­வில், புதுக்­கு­டி­யி­ருப்பு மேற்கு மந்­து­வில், இர­ணைப்­பாலை, தேவி­பு­ரம், மன்­னா­கண்­டல், கைவேலி, சுதந்­தி­ர­பு­ரம், உடை­யார் கட்டு, விசு­வ­மடு உள்­ளிட்ட கிரா­மங்­களைச் சேர்ந்த மக்­களே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வவு­னி­யா­வி­லும் வறட்சி தாக்கம் ஆரம்­பித்­துள்­ளது. அங்கு ஆயி­ரத்து 159 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 4ஆயி­ரத்து 551 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தற்­போது ஏற்­பட்­டுள்ள கடும் வறட்சி கார­ண­மாக சிறிய குளங்­கள் மற்­றும் நீர் நிலை­கள் மிக வேக­மாக வற்­று­கின்­றன. இந்த நிலை­யில் குறித்த மாவட்­டங்­க­ளில் உள்ள பிர­தே­சத்­தில் தண்­ணீரைப் பெற்­றுக்­கொள்­வ­தில் மக்­கள் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளார்­கள்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­விப் பொருள்­கள் வழங்­க­வும் அந்தந்த மாவட்­டங்க­ளில் உள்ள இடர் முகா­மைத்­து­வப் பிரி­வி­னர் நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுத்துள்­ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.