188
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றுப்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரியம்மன்கோவில் வீதி மட்டக்களப்பைச் சேர்ந்த 58 வயதுடைய கணபதிப்பிள்ளை நாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மீனவர் நேற்றிரவு வழமைபோல மீன்பிடிப்பதற்கு சென்றுள்ள அவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர் அவரை தேடிய நிலையில் இன்று காலை சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதான வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் .உயிரிழந்தவருக்க வலிப்பு நோய் உள்ளதாக ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளம குறிப்பிடத்தக்கது
Spread the love