256
மன்னாரில் பல சபைகளை கைப்பற்ற ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்த்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்ட உறுப்பினர்கள்..
மன்னாரில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து பல சபைகளை ஆட்சியமைக்க தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சிலர் முஸ்தீப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது. இந்த வகையில் மன்னார் பிரதேச சபைக்கான தலைவர்,உப தலைவர் தெரிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(10) மாலை மன்னார் பிரதேச சபையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர் தெரிவுக்காக மன்னார் தோட்டவெளியைச் சேர்ந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான எஸ்.அந்தோனிப்பிள்ளை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். சுமார் 50 இலட்சம் ரூபாய் பணத்தை கையூட்டலாக பெற்றுக்கொண்டே கட்சியின் விதி முறைகளை மீறி ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள போதும் இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லைஃ
கட்சிக்கு எதிராக செயற்பட்ட உறுப்பினர் எஸ்.அந்தோனிப்பிள்ளைக்கு எதிராக கட்சி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதே வேளை இன்று புதன் கிழமை(11) காலை 10 முணிக்கு மன்னார் நானாட்டான் பிரNதுச சபைக்கான தலைவர்,உப தலைவர் தெரிவுகள் இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டு வரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தலைமைப்பீடத்தை கைப்பற்ற முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் பதவி தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவருக்கு வழங்கவும், உப தலைவர் பதவி ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் யாரும் எவருக்கும் ஆதரவு வழங்க கூடாது என கட்சி முக்கிய கோரிக்கையை விடுத்துள்ள போதும் கட்சிக்கு எதிராக நானாட்டன் பிரதேச சபையின் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் சிலர் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Spread the love