குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணி மைக்கேல் கோஹென் ( Michael Cohen ) இன் வீடு மற்றும் காரியாலயம் என்பனவற்றை எப்.பி.ஐ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரஸ்ய தலையீடு குறித்த விசாரணைகளின் ஓர் கட்டமாக இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்பின் சட்டத்தரணியின் வீடு மற்றும் காரியாலயத்தை எப்.பி.ஐ அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை செய்தமை, ட்ரம்ப் மீதான சட்ட அழுத்தங்களை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சுற்றி வளைப்பு குறித்து ட்ரம்ப் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது