176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்கள் காரணமாக நாட்டின் அரசியல் நிலைமை கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் சர்ச்சை நிலைமைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Spread the love