Home இலங்கைசுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்

சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பிரதமருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இவ்வாறு வாக்களித்த 16 அமைச்சர்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்யவும், அரசாங்கத்தை விட்டு விலகவும் தீர்மானித்துள்ளனர். ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

பதவிகளை ராஜினாமா செய்வது குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், ஜனாதிபதியின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டு;ளளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More