Home இலங்கைஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் :

ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக மால்டாவில் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் திரேசா மே மற்றும் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் உள்ளிட்டவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதேவேளை, பிரித்தானிய மஹாராணியின் 92ம் பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More