குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக வேறும் உறுப்பினர்களை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் உள்ளக அறிக்கையில் இது குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இளம், புத்தாக்க முயற்சியுடைய, செயற்திறனுடைய நான்கு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.