Home இந்தியா டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

by admin

இன்று அதிகாலை தரைத்தளத்தில் உள்ள வாகனத்தரிப்பிடப் பகுதியில் பற்றிய தீ ஏனைய தளங்களுக்கு பரவியதாகவும் இதனால் முதல் தளத்தில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தகவல் அறிந்து 8 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More