இந்தியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி 371 பேர் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பி;ல இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
1993ல் மும்பையில் 257 பேர் கொல்லப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு 2015-ல் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு இந்திய நீதிமன்றங்களில் 136 பேருக்கும் 2017-ம் ஆண்டில் 109 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொலைக் குற்றங்களுக்காக 2016-ம் ஆண்டில் 87 பேருக்கும் 2017-ல் 51 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய சிறைகளில் மொத்தம்371 மரண தண்டனை கைதிகள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்ட பல்கலைக்கழக மையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து இந்த விவரத்தை சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் பெலாரஸ் நாட்டில் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.