158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
File Photo
விபத்துக்கு உள்ளாகியிருந்த வெளிநாட்டு படகு ஒன்றுக்கு இலங்கைக் கடற்படையினர் உதவியுள்ளனர். காலி கலங்கரை விளக்கத்திற்கு 72 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியிருந்த படகு ஒன்றுக்கு இலங்கைக் கடற்படையினர் உதவியுள்ளனர். சென்டிட்டி என்ற வெளிநாட்டு பாய்மரக் கப்பல் ஒன்றுக்கே இவ்வாறு உதவி வழங்கப்பட்டுள்ளது. சயுரல என்ற இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான கப்பலின் ஊடாக குறித்த பாதிக்கப்பட்ட படகிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாய்மரக் கப்பல் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Spread the love