Home இலங்கைஐக்­கிய தேசியக்  கட்சியின்  பிர­தான பத­விகள் மே தினத்தில் அறி­விக்­கப்­படும்…

ஐக்­கிய தேசியக்  கட்சியின்  பிர­தான பத­விகள் மே தினத்தில் அறி­விக்­கப்­படும்…

by admin

ஐக்­கிய தேசியக்  கட்சியின்  பிர­தான பத­விகள் 19 ஆம் திகதி நிரப்­பப்­ப­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் சபை கடந்த வாரம் அல­ரி­மா­ளி­கையில் முதன்­மு­த­லாக கூடி­ய­துடன், அதில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்­படி அன்­றைய தினம் இடம்­பெற்ற பதவி நிய­ம­னம்­பற்­றிய முடிவு ஐ.தே.கட்­சியின் மே தினக் கூட்­டத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என அர­சியல் சபை தரப்பு செய்திகள் தெரி­விக்­கின்­றன.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­புக்­காக அதி­காரம் மிக்க அர­சியல் சபை­யொன்று கடந்த 7ஆம் திகதி இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் உருவாக்­கப்­பட்­டது. ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் இச்­ச­பைக்கு பதவி வழி­யாக நியமனம் பெற்­றுள்­ளனர். அத்­துடன் நவீன் திசா­நா­யக்க, அகில விராஜ் காரி­ய­வசம், மங்­கள சம­ர­வீர, ரஞ்சித் மத்­தும பண்­டார, ஹரின் பெர்­னாண்டோ, ருவன் விஜே­வர்­தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்கிரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளீன் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More