Home இலங்கைஎதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.  இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட போதிலும், அவர்களினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதனால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவி ஆகியன கிடைக்கப்பெறாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More