Home இந்தியாஎதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் காரணமாக ஆளுனர்மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

எதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் காரணமாக ஆளுனர்மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

by admin

சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து வருகின்றமைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளதென அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் , தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையை சுற்றி ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More