குளோபல் தமிழச் செய்தியாளர்
ஜிம்னாஸ்டிக் மருத்துவர் தம்மை நூற்றுக் கணக்கான தடவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்காவின் பிரபல ஒலிம்பிக் வீராங்கனை மகள்யா மரோனேய் (McKayla Marone ) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மருத்துவர் லெரி நாசர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தாம் 13 வயதாக இருந்த காலம் முதல் பாலியல் கொடுமைகளை தாங்கிக் கொள்ள நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
200க்கும் மேற்பட்டவர்களை இந்த மருத்துவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக டொக்டர் நாசருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் சிகிச்சைகள் என்ற பேர்வையில் தம்மை பாலியல் ரீதியாக மருத்துவர் துன்புறுத்தியதாக மரோனேய் தெரிவித்துள்ளார்.