159
ஈரானின் தென்பகுதி மாகாணமான புஷேஹரின் தலை நகரில் அமைந்துள்ள பெரிய அணு உலை அமைந்திருக்கும் காகி பகுதியில், நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்தநிலநடுக்கமானது 5.9-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன்காரணமாக அருகிகலுள்ள மக்கள அச்சமடைந்துள்ள போதிலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, அந்தப் பகுதி யில் அமைந்திருக்கும் மற்ற எந்தக் கட்டிடங்கள், வீடுகள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் காரணமாக, அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
Spread the love