Home சினிமாயுவனின் திரைப்படத்தில் அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி

யுவனின் திரைப்படத்தில் அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி

by admin

பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்து யுவன் சங்கர்ராஜா தயாரிக்கும் திரைப்படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். குறித்த படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ முதலிய வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இந்தத் திரைப்படத்தை இயக்குகின்றார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார். மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More