இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Cheng Xueyuan   இதனைத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை இராணுவ  முகாம் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் குறித்து சீனாவும் இலங்கையும் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோரை தனித்தனியாக சந்தித்த போது சீனத்தூதுவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன இராணுவ மயமாக்கலுக்கு உட்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.