குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அடுத்த மாதம் நடைபெறும் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளின் த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இந்த திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்தில் காணப்படும் நெருக்கடிக்குள் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முடியாது போகும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதா முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல்..
153
Spread the love