Home இலங்கைஇலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம்…

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹிட் காகன் அபாசி (Shahid Khaqan Abbasi ) தெரிவித்துள்ளார். பாகிஸ்தானும் இலங்கையும் பிராந்திய வலயத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென விரும்புகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு உறவுகள் ஸ்திரமான நிலையில் காணப்படுகின்றது எனவும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத்திற்கு எதிரான யுத்ததின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More