157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தினை பகிஸ்கரித்திருந்தனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னர், முதல் தடவையாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love