கேரள முதல்வர் பினராயி விஜயன் தலை வெட்டப்படும் என கொலை மிரட்டல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள காலல்நிலையம் ஒன்றின் அருகே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் சுவரொட்டிகளில் கேரள ஆதிவாசிகளின் கவனிக்காத விஜயனின் தலை வெட்டப்படும் என எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினர் கேரள மாநிலத்தில் உள்ள நக்சல்பாரி இயக்கத்தினர் இந்த சுவரொட்டிகளை ஒட்டி இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஆதிவாசி இளைஞர் ஒருவரை காவல்துறையினர் ; விசாரணைக்காக அழைத்துச் சென்று, அவரை அடித்துக் கொன்று, காட்டுப்பகுதியில் வீசியதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
மேலும், வேறொரு ஆதிவாசி இளைஞரும காவல்துறையினரினால் அடித்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன் பாலக்காடு மாவட்டத்தில் மது என்ற ஆதிவாசி இளைஞரும் ஒரு குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களால் நக்சல்பாரி இயக்கத்தினர் இந்தப் சுவரொட்டிகளை ஒட்டி இருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது