Home இலங்கைமரக்கறி விலை வீழ்ச்சி தொடர்பிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்…

மரக்கறி விலை வீழ்ச்சி தொடர்பிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


மரக்கறி விலை வீழ்ச்சி தொடர்பிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வரண்ட வலய மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்ததனைத் தொடர்ந்து, விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அமைச்சர் சரத் அமுனுகமவும், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் மரக்கறி விலை வீழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட உரையாற்றியுள்ளனர்.

வட்டக்கா,தக்காளி, பூசணி உள்ளிட்ட பல்வேறு மரக்கறி வகைகளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More