அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை சந்திக்கும் போது அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் போம்பேயோ (mike pompeo) தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத திட்டம் குறித்து பின்வாங்க இயலாத நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொள்ள வேண்டும் என போம்பேயோ தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சிஐஏ வின் இயக்குநராக இருந்தபோது கிம்மை ரகசியமாக போம்பேயேர் சந்தித்த போதும் அவரது சந்திப்பு குறித்த விவரங்கள் சிறிது காலம் கழித்தே வெளியிடப்பட்டுள்ளன.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை வட கொரியா விடடொழிப்பதை உறுதி செய்ய ஆய்வு செயல்முறை வேண்டும் என்பது குறித்து பேசுமாறு டிரம்ப் தன்னிடம் தெரிவித்ததாகவும் போம்பேயோ தெரிவித்துள்ளார். அத்துடன் வட கொரியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கப்படும் அமெரிக்க பொதுமக்கள்; குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஆணு ஆயுத பயன்பாடற்ற கொரிய தீபகற்பம் குறித்து கிம்முடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தெரிவித்துள்ளார்.