ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 125 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
2016-17ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணி 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் அவுஸ்திரேலிய அணி 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
மேலும் நியூஸிலாந்து அணி 102 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இங்கிலாந்து அணி 98 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இலங்கை அணி 94 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், உள்ளன.
டெஸ்ட் தரவரிசை பட்டியலில் எதிர்வரும் காலத்தில் முழு நேர டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம் பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது