Home இலங்கைலெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் விருது திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரு காவற்துறை குழுக்கள்

லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் விருது திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரு காவற்துறை குழுக்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் தங்க மயில் விருது திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு காவற்துறை குழுக்களை நியமித்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் உடல் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் முன்னர் அங்கு நடைபெற்ற சமய கிரியைகளின் போது தங்க மயில் விருது திருடப்பட்டுள்ளது.  அப்போது ஜேமீஸ் பிரிஸின் உடல் அருகில் இருந்த நபர் ஒருவர் காணொளி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காவற்துறையினர் அந்த நபரிடம் விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் சமய கிரியைகளில் கலந்துக்கொண்ட ஜேமீஸ் பீரிஸின் உறவு முறை பெண்ணொருவரின் பெறுமதியான ஐபோன் ஒன்றும் காணாமல் போயுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் மத்தும பண்டார காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் நேற்று மதியம் வரை 12 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More