Home இலங்கைசமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுவதை ஏற்கமுடியாது

சமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுவதை ஏற்கமுடியாது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கபபடும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் திஸாநாயக்க, சமூர்த்தி திட்டம் தொடர்பாக சட்டத்திற்கு அமைய அதனை மாற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More