Home உலகம்ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு

by admin


ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா, பிரித்தானியா ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருந்தன. ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விடயமாகும்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தம குறித்து தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வந்தநிலையில் குறித்த ஒப்பந்தததிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த முதலாம் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது எனவும் எனவே, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

, அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால் மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும் என ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More