Home இலங்கைபோரில் உயிரிழந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைவரும் நினைவுகூரப்பட உள்ளனர்..

போரில் உயிரிழந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைவரும் நினைவுகூரப்பட உள்ளனர்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


இறுதிக்கட்டப் பேரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர, எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நினைவு தின நிகழ்வை நடத்த வடக்கு முதலமைச்சர் உட்பட மாகாண சபை  நேற்று முன்தினம் தீர்மானித்துள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கூடிய மாகாண சபை உறுப்பினர்கள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. நினைவு தின நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவு தூபி அருகில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளதுடன் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அனைவரும் நினைவுகூரப்பட உள்ளதாகவும் அந்த  சிங்கள பத்திரிகை   தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More