குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டுள்ளது. டுவிட் பதிவு ஒன்று தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அமீனுக்கு, இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி, அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் அழுத்தம் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்று அமீனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் விசாரணை
: May 9, 2018 @ 11:57
பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்தமை குறித்தே இவ்வாறு விசாhணை நடத்தப்பட உள்ளது. வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ள நாளை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னலையாகுமாறு அசாம் அமீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து கொள்கைப் பிரகடன உரையாற்றிய ஆற்றிய விடயங்களை எவ்வாறு ஜனாதிபதி நடைமுறைப்படுத்தப் போகின்றார் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ‘நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர், எனினும் இந்த வாக்குறுதிகளை எவ்வாறு செயலில் காண்பிக்கப் போகின்றீர்கள்? அதனை உறுதிப்படுத்துங்கள்’ என அசாம் அமீன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது