Home இலங்கைஇலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சி

இலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் செங் சியுவான் (  Cheng Xueyuan  ) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சில புறச் சக்திகள் சீன இலங்கை கூட்டு திட்டங்கள் தொடர்பில் போலியானதும் தேவையற்றதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையுடனான உறவுகளுக்கு இராணுவ மூலம் பூசப்படுவதாக வருத்தம் வெளியிட்டுள்ள அவர் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டமானது எந்த வகையிலும் இராணுவ ரீதியான தேவைக்காக மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More