Home இலங்கை13 மில்லியனில் வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு உதவி

13 மில்லியனில் வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு உதவி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட 13 மில்லியன் நிதியில் வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு நன்னீர் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வரவு செலவுகளைப் பேணுவதற்கு கணனி என்பனவும் இன்று கிளிநொச்சியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது

இன்று காலை பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் அவர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்தார்

மொத்தமாக 13 மில்லியன் ரூபாவிற்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இருபது படகுகள் ,எட்டாயிரம் ரூபா பெறுமதியான 208 குல்லாக்கள் ,பன்னிரெண்டாயிரம் ரூபா பெறுமதியான 70 மீன் விற்கும் பேட்டிகள் மற்றும் 72 தராசுகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அலுவலக உத்தியோகத்தர்கள் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More